Sunday, January 21, 2018

நான் அறியேன் பராபரமே



அந்தப் கண்களுக்குள் 

எனை எப்படித் தொலைத்தேன் 
      நான் அறியேன் பராபரமே 

என் தேடலுக்கான தீர்வாய் 

என் தேடலின் தேடலாய்
நீ எப்படி அமைந்தாய் 
      நான் அறியேன் பராபரமே 

சில்லிட்டு நீ சீறினாலும் 

சிதறாமல் 
உனக்குள் அடக்கமாய் நான் 
ஏனோ ?
      நான் அறியேன் பராபரமே 

வெறுப்புத் தீயாய் நான் 

எனை ஆட்கொள்ளும் 
நீராவி நீ 
எங்கிருந்து வந்தாய் ?
      நான் அறியேன் பராபரமே 

வாரி இறைக்கும் வள்ளல் அப்பன் நீ 

உன் ஒரு காய் தேடிய ஓசை நான் ! ஏனோ ?
      நான் அறியேன் பராபரமே 

பிரபஞ்சத்தில் நான் ஒழித்து 

வைத்திருந்த ரகசியங்களை 
உனக்காய் அவிழ்த்திருந்தேன் 
எனை அறியாமல் ஏனோ ?
      நான் அறியேன் பராபரமே 

பூலோகத்தின் எத்தனை வழிகளோ 

அத்தனையையும் உன்னோடே 
பிராயணிக்க, எத்தனித்து காத்திருக்கிறேன் 

எதனாலோ ?
     நான் அறியேன் பராபரமே 

No comments:

Post a Comment

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...