Sunday, January 21, 2018

நான் அறியேன் பராபரமே



அந்தப் கண்களுக்குள் 

எனை எப்படித் தொலைத்தேன் 
      நான் அறியேன் பராபரமே 

என் தேடலுக்கான தீர்வாய் 

என் தேடலின் தேடலாய்
நீ எப்படி அமைந்தாய் 
      நான் அறியேன் பராபரமே 

சில்லிட்டு நீ சீறினாலும் 

சிதறாமல் 
உனக்குள் அடக்கமாய் நான் 
ஏனோ ?
      நான் அறியேன் பராபரமே 

வெறுப்புத் தீயாய் நான் 

எனை ஆட்கொள்ளும் 
நீராவி நீ 
எங்கிருந்து வந்தாய் ?
      நான் அறியேன் பராபரமே 

வாரி இறைக்கும் வள்ளல் அப்பன் நீ 

உன் ஒரு காய் தேடிய ஓசை நான் ! ஏனோ ?
      நான் அறியேன் பராபரமே 

பிரபஞ்சத்தில் நான் ஒழித்து 

வைத்திருந்த ரகசியங்களை 
உனக்காய் அவிழ்த்திருந்தேன் 
எனை அறியாமல் ஏனோ ?
      நான் அறியேன் பராபரமே 

பூலோகத்தின் எத்தனை வழிகளோ 

அத்தனையையும் உன்னோடே 
பிராயணிக்க, எத்தனித்து காத்திருக்கிறேன் 

எதனாலோ ?
     நான் அறியேன் பராபரமே 

காதல் வளர்த்தேன்



ஏங்கி ஏங்கி 
      தாங்கி தாங்கி 
காதல் வளர்த்தேன் 

விழித்து விழித்து 
      பேசி பேசி 
காதல் வளர்த்தேன் 

சிரித்து சிரித்து 
      வலித்து வலித்து 
காதல் வளர்த்தேன் 

ரசிக்க ரசிக்க 
      ரசித்து ரசித்து 
காதல் வளர்த்தேன் 

தேன் தேன் 
      தித்தித்தேன் 

தெளிவில்லா நிலை

தெளிவில்லா நிலை 

எப்பொழுதும் போல் சிறுவயது முதலே ஞாயிற்றுக் கிழமை முடிவடைவதில், ஏதோ ஒரு கருக்கல் கரு மேகமாய் மனதில் சூழ்ந்து ஆட்கொள்கிறது

வெள்ளிக் கிழமை தோய்ந்து தேயும் போது மனதில் பொங்கி எழும் உற்சாகம், என்னை வரப்போகும் இரு நாட்களில் கேள்வி கேட்க எவரும் இல்லை என்ற எனக்கான முதலாளித்துவம் ஓங்கி எழும்.

சின்ன சின்ன இலட்சியங்கள் பெரிய சாகசங்கள் சிறு குறிக்கோள்கள் அத்தனையையும் இந்த இரு நாட்களில் நாம் சாதித்து  விடலாம் என்ற தப்புக் கணக்கை இந்த ஞாயிற்றுக் கிழமை முடியும் போது மட்டுமே உணர முடிகிறது.

இந்த வாழ்க்கையில் நமக்கான தேடலில் பிறருக்கான சந்தோஷத்திற்காக என்னின் காலத்தை பரிசை அளிக்க என் இலட்சியங்கள் சுக்கு நூறாய்....

என்ன தான் தேடுகிறேன் ? இதற்கான விடையை நான் அறிந்து தெளியும் போது நான் பூரணம் அடைவேன் என நம்புகிறேன்.

ஆறு வருட அலுவலக விடை பெறல்

ஆறு வருட அலுவலக விடை பெறல்

ஏதேதோ எண்ணங்களையும் 
திகட்டாத நியாபகங்களையும் 
செதுக்கிய மனிதர்களையும் 
அழியாத நினைவுகளையும் 
பூட்டிய இதயத்துக்குள் 
பத்திரமாய் எடுத்துச் செல்கிறேன் 

கண்ணீர்

கண்ணீர் 

கோழைத்தனம் 
எதிர்பார்ப்பின் பலன் 
தவறுகளின் அன்பளிப்பு 
பலவீனம் 
கவிதை - மன வலியை இறக்கி வைக்க
தமிழ் - சந்தோஷம்
பெண்மை - வலிமை . என்னை பெருமை கொள்ள செய்வது

நட்பு

நட்பு 

சிரிக்க கற்றுக் கொடுத்தது :) 

லட்சியம்

லட்சியம் 

எதுவும் அறியாத வயதில் 
எடுக்கப்படும் முடிவு -

வளர்ந்த பின் 
களைந்து போன கனவு 

பண்பு

பண்பு 

அரவணைக்க யாரும் 
இல்லாத போது
பண்பும் அன்பும் குணமும் 
காற்றோடு போகும் 

உண்மை

உண்மை 

சுதந்திரத்தை உணரும் 
தருணங்களில் மட்டுமே 
இதனை உச்சரிக்க 
'நா ' ஒத்துழைக்கும் 

நண்பர்கள்

நண்பர்கள் 

இரு கட்டில்களில் 
ஈரைந்து விழிகளின் 
இனிமையான உறக்கம் 

அர்த்தமில்லாமல் 
அரை கூவலிட்ட 
அந்த நாட்கள் 

ஆனந்த சிட்டுகள் தாம் 
அந்த நாட்கள் எல்லாமே இன்பமே 
காரணமே இல்லா சிரிப்புகள் 
கவலையே இல்லா சிலாகிப்பு
உலகம் அழகாய் மட்டுமே தெரிந்தது 

ரோஜாப் படுக்கையில் ரோஜாக்கள் 
ராஜா போகம் தான் எந்நாளும் 
விடுதியின் ராணிகள் 

எத்தனை எத்தனை விவாதங்கள் 
எத்தனை கதைகள் 
எவ்வளவு பேசியும் 
தீராத இரவுகள் 

முத்துச் சிரிப்பு உதிர்க்காத 
நிமிடமே இல்லை 

எவ்வளவு ஓட்டியும்
புன்னகை மாறா எழில் 

ஓட்டி ஓட்டி 
சிரித்துக் கிடைக்கும் விஜி 

மொக்கை பேச்சுக்கள் 
தாங்க முடியாமல் 
சிரிக்கும் தீப்தி 

எதற்கும் விளக்கம் 
கொடுக்கும் பிரியா 

ஏதாவது கதை சொல்லி 
கொல்லும் நான் 

அந்த சின்னஞ் சிறிய அறையில் 
அழகிய கனவுகளுடன் 
அமைந்த உறவுகள் 
என்றும் அர்த்தம் நிறைந்தவை 

Saturday, January 13, 2018

இருளோடு ஒரு உரையாட‌ல்!!!

உன்னை நேசிப்ப‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேர் என‌த் தெரிய‌வில்லை...
ஆனால் என் உல‌க‌ம் நீ ...
உன‌க்குள் உருவ‌த்தை தேடுகிறேன் ...
உன‌க்குள் உயிரைத் தேடுகிறேன் ...
தேடுத‌ல் தேடுத‌லாக‌த் தான் இருக்கிற‌து ...
எத‌னையும் இன்னும் அடைய‌வில்லை ...

அத‌னால்,
உன்னை விட்டுப் பிரிய‌ ம‌ன‌ம் துடிக்கிற‌து.
நானும் உன்னை விட்டுச் செல்கிறேன் ...
நீயும் சென்று விடு!

என் க‌ண்க‌ளுக்கு ஒளி கிடைத்தால்,
மீண்டும் உனை நேசிப்பேன் இர‌வாக‌!!!

அன்புட‌ன்,
உன் ம‌கள் க‌ண்க‌ளில் ஒளியைத் தேடி!

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...